ADDED : ஆக 02, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பேரூராட்சியில் மன்ற கூட்டம்நடந்தது.
தலைவர் குருசாமி இறந்ததை அடுத்து அவரது மகன் காமாட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதன்பின் முதல் மன்ற கூட்டம் நடந்தது.
அதில் பேரையூர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கழிப்பறை கட்டித் தருவதற்கு சிறப்பு நிதியில்
ரூ.75 லட்சம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயல் அலுவலர் மணிகண்டன், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.