ADDED : நவ 23, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மேலுார் உறங்கான்பட்டியில், நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி நடந்தது.
பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ் கூறுகையில், ''நெற்பயிரை தாக்கக்கூடிய இலைச் சுருட்டு புழு, குருத்து பூச்சி, புகையான், கதிர் நாவாய்ப்பூச்சிகளை அடையாளம் காண வேண்டும்.
நெல் வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான தட்டான், பொறி, வண்டுகள், சிலந்திகளின் பயன்களையும் அறிய வேண்டும். குருத்து பூச்சியை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி தேவைப்படும்'' என்றார். பங்கேற்ற விவசாயிகளுக்கு இனக்கவர்ச்சி பொறி இலவசமாக வழங்கப்பட்டது.

