ADDED : ஆக 29, 2026 06:21 PM
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் அலங்காநல்லுார் கல்வேலிபட்டியில் நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை களப்பயிற்சி நடந்தது.
நெற்பயிரை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகள், புகையான் தத்துப்பூச்சிகள் கதிர் நாவாய் பூச்சிகளின் தாக்கம் சேத அறிகுறி, கட்டுப்படுத்தும் முறைகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பேசினார். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, மண் பரிசோதனை, மண்வள அட்டை பயன்பாடு குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தெய்வேந்திரன் விளக்கினார். நெற்பயிரில் குருத்துப் பூச்சியை கட்டுப்படுத்தும் முறை பற்றி செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. ஒரு எக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து தாய் அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அழிக்க பரிந்துரைக்கப்பட்டது. வேளாண் அலுவலர் வசந்தகுமார், அட்மா பணியாளர்கள் வேல்முருகன், சவுந்தரராஜன் ஒருங்கிணைத்தனர்.
