/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'மா' வில் பூச்சி மருந்து தெளிப்பு துவக்கம்
/
'மா' வில் பூச்சி மருந்து தெளிப்பு துவக்கம்
ADDED : ஜன 08, 2025 06:06 AM

பாலமேடு : பாலமேடு சுற்றுப்பகுதிகளில் மா மரங்களை பூச்சித் தாக்குதலில் இருந்து காக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது.
இங்குள்ள மலை அடிவார பகுதிகளில் பல நுாறு ஏக்கரில் மா மரம் பயிரிடப்பட்டுள்ளது. மாம்பழங்கள் இங்குள்ள முடுவார்பட்டி சந்தையில் விற்பனை செய்வதும், மதுரை சந்தை மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது. தற்போது மா மரங்கள் பூக்கும் நிலையில் உள்ளன. இந்நிலையில் பெரும்பாலான மா மரங்களை பூச்சிகள் தாக்க துவங்கியதால் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலமேடு அஜய்: விரியன் பாம்பு பூச்சி எனப்படும் பூச்சிகளின் புழுக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை இலை, பூக்களை சேதப்படுத்தும். பிஞ்சுகளை முழுமையாக உண்ணும். மழை பெய்தால் பூக்கள், பிஞ்சுகள் கருகிவிடும். 20 நாட்களுக்கு ஒருமுறை மருந்து தெளிக்கிறோம். பூச்சிகள் அதிகரித்தால் 15 நாளைக்கு ஒரு மருந்து அடிப்போம் என்றார்.