/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'பாரம்பரிய விளையாட்டு வாரியம் அமைக்கணும்' குறைதீர் கூட்டத்தில் மனு
/
'பாரம்பரிய விளையாட்டு வாரியம் அமைக்கணும்' குறைதீர் கூட்டத்தில் மனு
'பாரம்பரிய விளையாட்டு வாரியம் அமைக்கணும்' குறைதீர் கூட்டத்தில் மனு
'பாரம்பரிய விளையாட்டு வாரியம் அமைக்கணும்' குறைதீர் கூட்டத்தில் மனு
ADDED : ஜன 21, 2025 06:09 AM

மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.
டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் அளித்த மனு: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மரணம் அடைந்த நவீன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், மாடு உரிமையாளர்களுக்கு காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டை விளையாட்டுத் துறையோடு இணைத்து, கபடி, சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளோடு ஒருங்கிணைத்து பாரம்பரிய விளையாட்டு வாரியம் அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில துணைத் தலைவர் கர்ணன் மனுவில்,
''திருமங்கலத்தில் வெளியூர் பஸ் ஸ்டாப்பில் கழிவறை, பயணிகளுக்கு குடிநீர், இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். பஸ்ஸ்டாண்டில் வியாபாரிகள், கடைகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.