/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காந்தி மியூசியத்தில் தியாகிகள் நினைவுத்துாண் குறைதீர் கூட்டத்தில் மனு
/
காந்தி மியூசியத்தில் தியாகிகள் நினைவுத்துாண் குறைதீர் கூட்டத்தில் மனு
காந்தி மியூசியத்தில் தியாகிகள் நினைவுத்துாண் குறைதீர் கூட்டத்தில் மனு
காந்தி மியூசியத்தில் தியாகிகள் நினைவுத்துாண் குறைதீர் கூட்டத்தில் மனு
ADDED : அக் 07, 2025 04:16 AM
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் டி.ஆர்.ஓ., அன்பழகன் தலைமையில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவி யாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான செயற்கைக்கால், மற்றொருவருக்கு ஊன்றுகோலை டி.ஆர்.ஓ., வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் சுவாமிநாதன், தொழில் வழிகாட்டி அலுவலர் வெங்கடசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி அமைப்பின் சார்பில், தமுக்கம் அருகே பாலப் பணிகள் நடப்பதால் ரோட்டிலுள்ள தியாகிகள் நினைவு ஸ்துாபியை காந்தி மியூசியத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
அதன் செயலாளர் முத்துப்பாண்டி, நிர்வாகி பாலு என்ற சுந்தரமகாலிங்கம், நேதாஜி இயக்க நிர்வாகி சுவாமிநாதன் கூறுகையில், ''தியாகிகள் ஸ்துாபியை மாநகராட்சி வளாகத்திற்கு மாற்றம் செய்ய உள்ளதாக கூறினர். அதை காந்தி மியூசியத்தில் வைப்பதே பொருத்த மாகும். அதற்கு கலெக்டர் அனுமதி தேவை என்பதால் மனு கொடுத்தோம்'' என்றனர்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், திருமால் கிராமம் லட்சுமணன் உட்பட 10 பேர் அளித்த மனுவில், ''திருமால் கிராமத்தில் அனுமதிக்கப்பட்ட கல்குவாரியை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்' என தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் வெள்ளிமலைச்சந்து பகுதி சரவணகுமார் தலைமை யில் சிலர் அளித்த மனுவில், ''இப்பகுதியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து சிலர் வேலி அமைத்துள்ளனர். மாநகராட்சி மேற்கு மண்டல அதிகாரி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டும் அகற்றவில்லை. பொதுப்பாதையில் குடிநீர் குழாய் அமைக்கவும் எதிர்க்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.