ADDED : மார் 21, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை லோக்சபா தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட முதல்நாளான நேற்று இரண்டு சுயேச்சைகள் மனுதாக்கல் செய்தனர்.
தேர்தல் அதிகாரியாக கலெக்டர் சங்கீதா, உதவித்தேர்தல் அதிகாரியாக மதுரை ஆர்.டி.ஓ., ஷாலினி உள்ளனர். மதுரை செல்லுார் முத்துசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். இவர் போஸ்டர் ஒட்டும் தொழில் செய்கிறார். அரசியல் போஸ்டர்கள் ஒட்டி வருவதால் ஆர்வம் ஏற்பட்டு போட்டியிடுவதாக கூறினார்.
மதுரை செல்லுார் சங்கரபாண்டியன் மனுதாக்கல் செய்தார். முன்னதாக பணம் பெற்று ஓட்டளிப்பது தற்கொலைக்கு சமம் என சுட்டிக்காட்டும் வகையில் துாக்கு கயிறுடன் வந்தார். போலீசார் தடுத்தனர். இவர் சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் சுயேச்சையாக நின்றுள்ளார்.

