/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மணல் விற்பனைக்கு தனி கழகம் முத்தரசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
/
மணல் விற்பனைக்கு தனி கழகம் முத்தரசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
மணல் விற்பனைக்கு தனி கழகம் முத்தரசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
மணல் விற்பனைக்கு தனி கழகம் முத்தரசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
ADDED : ஆக 09, 2025 05:08 AM
மதுரை: மணல் அள்ளுதல் மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்த மணல் கழகம் (டாம்சாக்) அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இந்திய கம்யூ., மாநிலச் செயலாளர் முத்தரசன் 2020ல் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் ஆறுகள், அரசு நிலம், ராயத்துவாரி நிலத்தில் சட்டவிரோத குவாரிகள் மூலம் விதிகளை மீறி உவரி, உவர், வண்டல், சரளை, சவடு, கிராவல், மணல் அள்ளப்படுகிறது. இக்கண்மூடித்தனமான செயலை அனுமதிப்பதால், இயற்கைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுகிறது. வைகை, காவிரி, பாலாற்றில் மணல் அள்ள அனுமதித்ததால் இயற்கையான நீர்வரத்து பாதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றடைவதில்லை. நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சட்டவிரோதமாக சில மணல் குவாரிகள் செயல்படுகின்றன. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை. பட்டா நிலத்தில் மண் அள்ளுவதால், விவசாயம் பாதிக்கிறது. மண், மணலை அள்ளுவது மற்றும் விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு சிறு கனிம விதிகள்படி மணல் கழகம் (டாம்சாக்) ஏற்படுத்தக்கோரி தமிழக கனிமவளத்துறை, வருவாய்த்துறை முதன்மை செயலர்களுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மண், மணல் அள்ள உரிமம் வழங்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட விவகாரம். இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.