ADDED : பிப் 03, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாலுகா முடி திருத்தும் தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் தாசில்தார் மூர்த்தியிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தனர்.
மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வம், துணைச் செயலாளர் பாலமுருகன், நகர தலைவர் முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:
முடி திருத்தும் தொழிலாளர்கள் கொரோனா காலத்திற்கு பின் சரிவர வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறோம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக வாடிப்பட்டி பகுதியில் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.

