ADDED : நவ 07, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: நா.கோவில்பட்டி மக்கள் மேலுார் தாசில்தார் செந்தாமரையிடம் மனு அளித்தனர்.
அதில், சின்ன ஆனைப்பன் கண்மாய் மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனால் 72 ஏக்கரில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.