ADDED : செப் 25, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் திறந்தவெளி கால்வாய் மூலம் கழிவுநீரை கடத்துவதையும், பல இடங்களில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதையும் தடுக்க கோரி கமிஷனர் சித்ரா விடம் துணை மேயர் நாகராஜன் மனு அளித்தார்.
மண்டலம் 2க்கு உட் பட்ட அப்துல் ஜபார்கான், லஜபதிராய் தெருக்கள், மாநகராட்சி மைய அலுவலகம் எதிரே மழைநீர் வாய்க்கால், சுற்றுச் சூழல் பூங்கா, கரும்பாலை, வக்பு வாரிய கல்லுாரி பகுதியில் கவுன்சிலர்களுடன் துணை மேயர் ஆய்வு செய்தார்.
பல இடங்களில் கழிவு நீர் செல்ல முடியாமல் மழைநீர் கால்வாயுடன் கலந்து அடைப்பை ஏற்படுத்துவது, வக்புவாரிய கல்லுாரி மைதானத்திற்குள் கழிவுநீர் புகுந்தது.
கரும்பாலை பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படும் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி கமிஷனரிடம் மனுவாக அளித்தார்.