/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செஞ்சிலுவை சங்கம் செயல்பட கவர்னருக்கு மனு
/
செஞ்சிலுவை சங்கம் செயல்பட கவர்னருக்கு மனு
ADDED : டிச 13, 2024 04:36 AM
மதுரை: 'இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கியுள்ள மதுரை செஞ்சிலுவை சங்கம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உறுப்பினரும், ஊழியருமான சீனிவாசன், தமிழக கவர்னர் ரவிக்கு மனு அனுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த அமைப்புக்கு நடந்த நிர்வாகிகள் தேர்தலில், முறைகேடு நடந்ததாகக் கூறி அப்போதைய கலெக்டர் அனீஷ்சேகர் தேர்தலை ரத்து செய்தார்.
செஞ்சிலுவை சங்க நடவடிக்கைகளை முடக்கி வைத்தார். அதன்பின் ஒரு செயலாளர் மட்டுமே இச்சங்க பணிகளைக் கவனிக்கிறார்.
இச்சங்க உறுப்பினர் சீனிவாசன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சங்கம் செயல்படாததால் ரத்ததான, மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விபத்து மற்றும் பேரிடர் நிவாரண பணிகள், சுற்றுச்சூழல், சுகாதார பணிகள் முடங்கியுள்ளன. நிர்வாகிகள் தேர்தலில் வெளியாட்கள் ஊடுருவியதாலேயே இந்த அமைப்பு 2 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதன் சேவை உரியவர்களுக்கு கிடைக்காமல் போவதால், இந்த அமைப்பு மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கம் முடங்கியதால், தன்னார்வ தொண்டர்களும் உதவும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

