ADDED : ஜூலை 17, 2025 12:42 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனுாரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது.
டி.ஆர்.ஓ., அன்பழகன்,ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பட்டாமாறுதல், பிரதம மந்திரி விவசாய உதவித்தொகை, விவசாய நிலங்களுக்கு இலவச மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மக்கள் மனுக்கள் வழங்கினர். இதில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 300க்கும் மேற்பட்டோர் மனுக்கள் கொடுத்தனர்.
தங்கதமிழ்செல்வன் எம்.பி., தி.மு.க., நிர்வாகிகள் முகாமை பார்வையிட்டனர். மனுக்களுக்கு உடனே தீர்வு கிடைக்க வழிசெய்யும்படி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.
பேரையூர்: பேரையூரில் நடந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை கோரி ஏராளமானோர் மனு அளித்தனர். காலை 9:00 முதல் 5:00 மணி வரை நடந்த முகாமில் 757 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெரும்பாலானவை மகளிர் உரிமைத் தொகை கோரியவையே.