ADDED : டிச 08, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் தபால் தலை, நாணயங்கள் சேகரிப்பாளர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் சுவாமிப்பன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் தென்னிந்திய அஞ்சல்தலை சேகரிப்போர் சங்க தலைவர் ரோலன்ட் நெல்சன், 'இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு முன் இருந்த சமஸ்தானங்கள் வெளியிட்ட அஞ்சல் தலைகள்' பற்றி பேசினார். மாநில அஞ்சல்தலை கண்காட்சியில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தாய்லாந்து நாட்டில் நடந்த சர்வதேச அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சியில் வெண்கல பதக்கம் வென்ற உறுப்பினர் அன்புக்கு பரிசு வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் மாதவன் நன்றி கூறினார்.

