நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் கல்லுாரிகளுக்கு இடையிலான இயற்பியல் கூட்டம் நடந்தது.
'குவாண்டம் மற்றும் தொழில்நுட்பத்தின் அடுத்த எல்லை' என்ற பொருளில் மாநில அளவில்கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இயற்பியல் துறைத் தலைவர் லீனா சந்திரா முன்னிலை வகித்தார். கூடங்குளம் அணுமின் நிலைய முன்னாள் அறிவியல் அதிகாரி பண்டாரம், 'உலக முன்னேற்றத்திற்கும், மனித குல வளர்ச்சிக்கும் குவாண்டம் அறிவியல்' என்ற தலைப்பில் பேசினார். வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. ஒட்டுமொத்த வெற்றியாளர் கேடயத்தை அமெரிக்கன் கல்லுாரி வென்றது.துணை முதல்வர் அருள்மேரி நன்றி கூறினார்.