நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கச்சிராயன்பட்டியில் 10 நாட்களாக ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் லோகநாதன், போலீசார் தெய்வேந்திரன் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால் மக்கள் கலைந்து சென்றனர்.
திருச்சி - மதுரை 4 வழிச்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.