ADDED : மார் 08, 2024 01:23 AM
மதுரை: மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் வில்வம் இலை நேற்று காலை கிலோ ரூ.300 விற்கப்பட்டது.
பூக்களில் மல்லிகை பூ கிலோ ரூ.700 முதல் ரூ. 800 வரையும், முல்லை, பிச்சி ரூ. 800, சம்பங்கி அரளி ரூ.400, பட்டன் ரோஸ், பன்னீர் ரோஸ் ரூ.200, செவ்வந்தி ரூ.120 முதல் ரூ.200க்கு விற்றது. சாதாரண நாட்களில் கிலோ ரூ.30 முதல் ரூ.50 விற்கும் வில்வ இலை மகாசிவராத்திரியை முன்னிட்டு பத்து மடங்காக உயர்ந்தது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும் வில்வ இலை மதுரையிலேயே காட்டுப்பகுதியில் கிடைக்கிறது. மூவிலை முதல் 9 இலை வரை வில்வத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒரு சிலர் வில்வ இலை போல இருக்கும் குறிஞ்சாலை மரத்தின் இலைகளை பறித்து வில்வ இலை என்ற பெயரில் போலியாக விற்கின்றனர். வாடிக்கையாளர்கள் அறிந்து கொண்டால் போலிகளிடம் ஏமாறாமல் தவிர்க்கலாம்' என்றனர்.

