நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மேற்கு தாலுகா நாகமலை புதுக்கோட்டை பிர்க்கா வடபழஞ்சியில் டிச. 26 ம்தேதி காலை 10:00 மணிக்கு கலெக்டர் சங்கீதா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக இன்று (டிச. 18) காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை வடபழஞ்சி ஊராட்சி அலுவலகத்தில் முன்னோடி மனுக்கள் பெறப்பட உள்ளது.
மேற்கு தாலுகாவைச் சேர்ந்த அனைத்து கிராம மக்களும் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என தாசில்தார் செந்தாமரைவல்லி தெரிவித்தார்.