/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குழாய் இணைப்பு வந்தாச்சு; குடிநீர் வருவது என்னாச்சு ஐந்தெரு குடியிருப்போருக்கு ஐயம்
/
குழாய் இணைப்பு வந்தாச்சு; குடிநீர் வருவது என்னாச்சு ஐந்தெரு குடியிருப்போருக்கு ஐயம்
குழாய் இணைப்பு வந்தாச்சு; குடிநீர் வருவது என்னாச்சு ஐந்தெரு குடியிருப்போருக்கு ஐயம்
குழாய் இணைப்பு வந்தாச்சு; குடிநீர் வருவது என்னாச்சு ஐந்தெரு குடியிருப்போருக்கு ஐயம்
ADDED : மார் 07, 2024 05:48 AM

மதுரை: பராமரிப்பு இல்லாதபாதாள சாக்கடை, வாய்க்காலில் கொட்டப்படும் குப்பை, நாய்கள் தொல்லை, பயன்படாத குடிநீர் தொட்டி உள்ளிட்ட பிரச்னைகளோடு வாழ்ந்து வருகின்றனர் 91வது வார்டு பகுதி ஐந்தெருகுடியிருப்போர் நலச்சங்கத்தினர்.
இப்பகுதியில் விவேகானந்தா தெரு, ராகவேந்திரா தெரு, எம்.ஜி.ஆர்., தெரு, மகாராஜா தெரு, குமாரசாமி தெரு உள்ளிட்ட மூன்று குறுக்குத் தெருக்களை கொண்டுள்ளது. மேற்கே அவனியாபுரம் முக்கிய ரோடும், கிழக்கே மீனாட்சிநகர், வடக்கே வில்லாபுரம், தென்புறம் பராசக்திநகர் உள்ளிட்டவை மையப்பகுதியில் உள்ளன.
இப்பகுதியின் நலனுக்காக செயல்பட்டு வரும் ஐந்தெரு குடியிருப்போர்நலச்சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் திருப்பதி, பொருளாளர் சூரியபிரகாஷ், துணைத் தலைவர்கள் அழகேசன், ஜெயராஜ், துணைச்செயலாளர் நாகராஜன், செயற்குழு உறுப்பினர்கள் பாலன், மனோகரன், கண்ணன் பாபு, ஷியாம் சுந்தர், சீனிவாசன், கணேஷ்பாபு உள்ளிட்டோர் கூறியதாவது:
எங்கள் பகுதியில் தெருவிளக்குகள் எரிவதுமில்லை, குண்டும் குழியுமாக ரோடுகள் உள்ளன.இரவில் வெளியே செல்ல முடியவில்லை. நாய்கள்தொல்லை அதிகம் உள்ளது. ராகவேந்திரா தெருவில் ரோடுகள் பல ஆண்டுகளாக ரோடுகள் அமைக்கப்படவில்லை.
காலியாக உள்ள இடங்களில் குப்பை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதி வீடுகளுக்குள் பாம்புகள் வருகின்றன.
வீதிதோறும் குடிநீர் குழாய்க்காக தண்ணீர் தொட்டி, ஆழ்குழாய் மோட்டார் பொருத்தப்பட்டது. இதுவரை பயன் இல்லை. வாய்க்கால்களில் குப்பை கொட்டுவதால் கழிவுநீர் வீட்டுக்குள் வருகிறது.
பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. வீதிதோறும் எங்கள் சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்கியுள்ளனர். இதில் எப்போது தண்ணீர் வரும் எனத் தெரிவில்லை. பதினைந்து ஆண்டுகளாக இதே நிலையில் எந்த மாற்றமும் இன்றி உள்ளோம். என்று தீருமோ எங்கள் பிரச்னை என வேதனையை வெளிப்படுத்தினர்.

