நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் 'மரங்களின் காதலன்' என்றழைக்கப்பட்ட ஜெகதீஷ்குமார் நினைவாக மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி முதல் தெருவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.
பசுமையாளர்கள் குழு சார்பில் 30 நாட்கள் தொடர்ந்து மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டு, 5ம் நாள் நிகழ்வாக எம்மால் இயன்றது இயக்கம் சார்பில்நடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிறுவனர் கண்ணன், வழக்கறிஞர் சுந்தர்ராஜன், ஆர்த்தி, மல்லிகா பங்கேற்றனர்.