நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பை விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி கமிஷனர் கிருஷ்ணவேணியிடம் புகார்கள் குவிந்தன.
ஆய்வு நடத்த கமிஷனர் உத்தரவிட்டார். பொறியாளர் முத்துக்குமார், எஸ்.ஐ., தினேஷ் குமார், கடைகளில் விற்பனை செய்த 600 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தார். மேலும் அந்நிறுவனங்களுக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆய்வுகள் நடக்கும் என கமிஷனர் தெரிவித்தார்.