/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
/
காடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
ADDED : ஜூலை 21, 2025 02:59 AM
மதுரை: மதுரை வனத்துறையின் மாதாந்திர துாய்மைப்படுத்தும் இயக்கம் சார்பில் மாவட்ட வன அலுவலர் தருண் குமார் தலைமையில் காப்புக் காடுகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடந்தது.
வனக்கோட்டத்திற்குட்பட்ட கொடிமங்கலம், உத்தப்பநாயக்கனுார், பெருமாள் மலை, விக்கிரமங்கலம், சிறுமலை உள்ளிட்ட 8 காப்புக் காடுகளில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஊராட்சி நிர்வாகம், அரசு சாரா அமைப்புகள், தன்னார்வலர்கள் உதவியுடன் வனத்துறையினர் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். மக்களிடம் மஞ்சப்பையை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வன அலுவலர் தருண் குமார் கூறியதாவது:
மனித - வனவிலங்கு மோதலைக் குறைப்பதே இதன் நோக்கம். 350 கிலோ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகளை வன விலங்குகள் உட்கொள்வதால் அவை உயிரிழக்கின்றன. ட்ரெக்கிங் செல்வோர் உணவுக் கழிவுகளை கொட்டுவதால் வன விலங்குகள் அருகிலுள்ள வாழ்விடங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.
இதன் விளைவாக மோதல் ஏற்படுகிறது. காடுகளுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார். காடுகள், வன விலங்குகளைப் பாதுகாக்க உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.