/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பூமி பூஜையுடன் நின்ற விளையாட்டு திடல் பணி
/
பூமி பூஜையுடன் நின்ற விளையாட்டு திடல் பணி
ADDED : டிச 22, 2024 07:54 AM
வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி 6வது வார்டு விரிவாக்க பகுதியில் எம்.எல்.ஏ., நிதியில் 'அம்மா' விளையாட்டு திடலில் அடிப்படை வசதிக்கான பூமி பூஜை 2 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ துவக்கி வைத்தார். இதுவரை பணி நடக்கவில்லை. இப்பகுதி பொது பயன்பாட்டிற்காக 30 சென்ட் வரை ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றி ஏற்கனவே கம்பி வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இத்திடலில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் சிலம்பம் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. தற்போது வேலியை சுற்றி முள்செடிகள் வளர்ந்துள்ளன. இங்கிருந்த அடிகுழாய் பழுதாகிவிட்டது. பிளாட் விற்பனைக்காக போடப்பட்ட சாலைகளும் பழுதாகின. இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் தண்ணீர், கழிப்பிட வசதியின்றி சிரமப்படுகின்றனர்.
பேரூராட்சி அ.தி.மு.க., தலைவி கலா மீனா கூறுகையில், ''இடம் தொடர்பான பிரச்சனை எழுந்தது. அளவீடு பணிகள் முடிந்துள்ளது. கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ளது'' என்றார்.