ADDED : ஆக 10, 2026 12:50 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: விக்கிரமங்கலம் புதிய ஊராட்சி அலுவலகம் அருகே பல ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. முறையான பராமரிப்பின்றி தொட்டியின் பல இடங்களில் விரிசல் விழுந்து.
காரை பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. ஆங்காங்கே 'பெயின்ட்' உரிந்து கருப்பு நிறமாகிவிட்டது. அவ்வப்போது தொட்டியின் பக்கவாட்டு சுவர்களிலிருந்து காரை பெயர்ந்து விழுகின்றன. அருகில் உள்ள ஊராட்சி அலுவலகம், போஸ்ட் ஆபீசுக்கு தினமும் ஏராளமானோர் வருவதால், விபரீதம் விளைய வாய்ப்புள்ளது.
அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
