/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எஸ்.ஐ.ஆர்., - 'டெட்' தேர்வும் ஒரே பள்ளியிலா பணிக்கு சென்ற பி.எல்.ஓ.,க்கள் அதிருப்தி
/
எஸ்.ஐ.ஆர்., - 'டெட்' தேர்வும் ஒரே பள்ளியிலா பணிக்கு சென்ற பி.எல்.ஓ.,க்கள் அதிருப்தி
எஸ்.ஐ.ஆர்., - 'டெட்' தேர்வும் ஒரே பள்ளியிலா பணிக்கு சென்ற பி.எல்.ஓ.,க்கள் அதிருப்தி
எஸ்.ஐ.ஆர்., - 'டெட்' தேர்வும் ஒரே பள்ளியிலா பணிக்கு சென்ற பி.எல்.ஓ.,க்கள் அதிருப்தி
ADDED : நவ 17, 2025 02:04 AM
மதுரை: எஸ்.ஐ.ஆர்., என்ற தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியும், ஆசிரியர் தகுதி தேர்வும் (டெட்) ஒரே பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டதால் பி.எல்.ஓ.,க்கள் அதிருப்தியாகினர்.
தற்போது எஸ்.ஐ.ஆர்., பணியை தீவிரப்படுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் இப்பணிகள் பெரும் சவாலாக உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆளுங்கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நவ.15, 16 ல் ஓட்டுச் சாவடிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் எஸ்.ஐ.ஆர்., முகாம் நடத்த கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டார். இதன்படி மதுரை நகர் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு பி.எல்.ஓ.,க்கள் சென்றபோது பல பள்ளிகளில் 'டெட்' தேர்வு நடப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் அப்பகுதியில் உள்ள மரத்தடியில் அமர்ந்து எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற் கொண்டனர்.
பதற்றமாக்கிய 'சர்வர்' பிரச்னை இது குறித்து பி.எல்.ஓ.,க்கள் கூறியதாவது: நேற்று மதுரை நகரில் 52 பள்ளி மையங்களில் 'டெட்' தாள் 2 தேர்வு நடந்தது. அதேநேரம் பள்ளிகளில் சனி, ஞாயிறு எஸ்.ஐ.ஆர்., பணிகுறித்த முகாம்கள் நடத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் 'டெட்' தேர்வு நடக்கும் பள்ளி விபரங்களை எங்களுக்கு தெரிவிக்கவில்லை.
இதனால் பள்ளிகளுக்கு சென்றபோது எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அப்பகுதி மரத்தடியில் அமர்ந்து விண்ணப்பங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்தோம். விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் போது சர்வர் பிரச்னையாலும் மன உளைச்சல் ஏற்பட்டது.
இதற்கிடையே ஓட்டு எண்ணிக்கையின்போது கேட்பது போல ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பதிவேற்ற விபரங்களை அதிகாரிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டனர்.
திட்டமிடல் இல்லாததாலும், 'டெட்' தேர்வு நடப்பது தெரியாமலும் சனி, ஞாயிறு அன்று பள்ளிகளில் எஸ்.ஐ.ஆர்., முகாம் நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர்., பணிகளை அதிகாரிகளே குழப்புகின்றனர் என்றனர்.

