/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்
/
பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்
பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்
பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஒன்பது பறக்கும் படை குழுக்கள்
ADDED : மார் 01, 2024 06:37 AM
மதுரை : தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 1) துவங்கி மார்ச் 22 வரை நடக்கிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4ல் துவங்கி மார்ச் 25 வரை நடக்கிறது. தேர்வை கண்காணிக்க 9 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கலெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார், மின்வாரியம், போக்குவரத்து, கல்வித்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. மதுரை கண்காணிப்பு அலுவலர் நாகராஜமுருகன் தலைமை வகித்தார்.
வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கி தேர்வு பணிகள் எவ்வித இடர்பாடுமின்றி சிறப்புடன் நடக்க ஆலோசனை வழங்கப்பட்டது.
பிளஸ் 2 தேர்வை 323 பள்ளிகளைச் சார்ந்த 35 ஆயிரத்து 282 மாணவர்கள் 112 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வை 35 ஆயிரத்து 54 மாணவர்கள் எழுதுகின்றனர். முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் 9 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தேர்வு பணியில் 2 ஆயிரத்து 700 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
446 மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு சொல்வதை எழுத ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனித்தேர்வர்கள் 1013 பேர், சிறைக் கைதிகள் 55 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

