/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போக்சோ வழக்கு காப்பக நிர்வாகிக்கு தண்டனை
/
போக்சோ வழக்கு காப்பக நிர்வாகிக்கு தண்டனை
ADDED : மார் 02, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அருகே சத்திரப்பட்டியில் ரஷ் பவுண்டேஷன் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகத்தில் ஒரு சிறுமி தங்கியிருந்தார்.
அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக காப்பக உரிமையாளர் மதுரை எல்லீஸ் நகர் பெர்லின் ஜோஸ்59, கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த பணியாளர் ஜான் பிரபாகர் 67, மீது 2019 ல் சத்திரப்பட்டி போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர்.
போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரவேல், இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

