தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பொம்மன்பட்டியில் பலத்த காற்றில் சாய்ந்த கம்பங்கள்

பொம்மன்பட்டியில் பலத்த காற்றில் சாய்ந்த கம்பங்கள்

பொம்மன்பட்டியில் பலத்த காற்றில் சாய்ந்த கம்பங்கள்


ADDED : செப் 27, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: ‘பொம்மன்பட்டியில் பலத்த காற்று வீசியதில் வயலுக்குள் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்’ என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

பொம்பன்பட்டியிலிருந்து மயானத்திற்கு செல்லும் வழியில் வயல்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சில நாட்களுக்கு முன் காற்றுடன் வீசிய மழையின் போது மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்தன. இதனால் சில இடங்களில் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு மயானம், விவசாய  மோட்டார்களுக்கு மின்சாரம் தடைபட்டு அப்பகுதியினர் தவிக்கின்றனர்.

அப்பகுதி பாலு கூறியதாவது: இங்கு 10 நாட்களுக்கு முன் காற்றுடன் மழை பெய்த போது மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்கம்பிகள் சேதமடைந்து மயானத்திற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரவில் விளக்குகள் எரிவதில்லை. மின் மோட்டார் வேலை செய்யாததால் தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியவில்லை.

இதனால் இறுதிச் சடங்குகள் செய்வதற்கு சிரமப்படுகிறோம். சில விவசாய மோட்டார்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் விவசாயிகள் தவிக்கின்றனர். சாய்ந்து நிற்கும் கம்பங்கள் வயல்களில் வேலைக்குச் செல்வோர் மீது விழுந்து விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. மின்வாரியத்தினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us