தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் செய்தி...

போலீஸ் செய்தி...

போலீஸ் செய்தி...


ADDED : செப் 27, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* காவலாளி பலி சிட்டம்பட்டி: இந்த ஊரைச் சேர்ந்தவர் கனகு மலையாண்டி 55, அதே பகுதி கூட்டுறவு சொசைட்டியில் காவலாளியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு கத்தப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்றவர் மீது, திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதால், சம்பவ இடத்திலேயே கனகு மலையாண்டி இறந்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரிக்கிறார்.

---

* காப்பர் ஒயர் தொடர் திருட்டு

மேலுார்: அட்டப்பட்டியில் 4,500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி சார்பில் 6 ஆழ்குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகிக்கின்றனர். மோட்டார் பெட்டியில் இருந்து நீர்மூழ்கி மோட்டாருக்கு செல்லும் காப்பர் ஒயரை 2 மாதங்களில் 18 தடவை திருடிச் சென்றதால் குடிநீர் சப்ளை செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் சிரமப்படுகின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறியதாவது: மோட்டார் ஒயர் தொடர்ந்து திருடு போவதால் ஊராட்சியில் இருந்து தினமும் குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. ஊராட்சி நிர்வாகத்தில் கேட்டால், ஒரு முறை ஒயர் திருடு போனால் மீண்டும் மோட்டாரை இயக்க ரூ.9 ஆயிரம் செலவாகிறது என்கின்றனர்.

இதேபோல் 2 மாதங்களில் 18 முறை திருடு போயுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினரால் அந்தளவு செலவு செய்ய முடியாத நிலை உள்ளது. திருட்டு குறித்து பி.டி.ஓ., மற்றும் மக்கள் சார்பில் கீழவளவு போலீசில் புகார் கொடுத்துள்ளோம். இரவில் ரோந்து செல்வதுடன், நடவடிக்கை எடுத்து காப்பர் ஒயர் வாங்குவோரை கைது செய்தால் மட்டுமே திருட்டை தடுக்க முடியும் என்றனர்.

---

* அரசு டிரைவர் தற்கொலை மிரட்டல்

மேலுார்: அரசு போக்குவரத்துக் கழக டெப்போவில் டிரைவராக பணிபுரிபவர் கருப்பு. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தொழிற்சங்க கிளைச் செயலாளர். டெப்போ முன்பு கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் இவரது பெயர் சேதப்படுத்தப்பட்டிருந்தது. பிளக்ஸ் போர்டை சேதப்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிரைவர் கருப்பு, டெப்போ கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார், தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்ததை தொடர்ந்து கீழே இறங்கினார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us