/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீண்டும் பைக் ரேஸ் போலீசார் விசாரணை
/
மீண்டும் பைக் ரேஸ் போலீசார் விசாரணை
ADDED : மார் 29, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகரில் இளைஞர்கள் சிலர் மீண்டும் பைஸ் ரேஸில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் இளைஞர்கள் சிலர் 'பைக் ரேஸில்' ஈடுபட்டனர். இதுகுறித்து வீடியோ வெளியான நிலையில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இளைஞர்கள் தெற்குவாசல் பகுதியில் கூடினர். சிறிய ரோட்டில் அவர்களுக்குள் 'பைக் ரேஸ்' வைத்தனர். வாகனங்கள் சென்றுக்கொண்டிருக்கும் போதே ஆபத்தான முறையில் வேகமாக ஓட்டி வாகன ஓட்டிகளுக்கு திகிலுாட்டினர். இதுகுறித்தும் வீடியோ வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.