/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீஸ் விசாரணையில் மானாமதுரை ஆகாஷ் டெலிசன் மரணம் தீர்ப்பு ஒத்திவைப்பு
/
போலீஸ் விசாரணையில் மானாமதுரை ஆகாஷ் டெலிசன் மரணம் தீர்ப்பு ஒத்திவைப்பு
போலீஸ் விசாரணையில் மானாமதுரை ஆகாஷ் டெலிசன் மரணம் தீர்ப்பு ஒத்திவைப்பு
போலீஸ் விசாரணையில் மானாமதுரை ஆகாஷ் டெலிசன் மரணம் தீர்ப்பு ஒத்திவைப்பு
ADDED : மார் 14, 2026 06:48 AM
மதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை போலீஸ் விசாரணையில் ஆகாஷ் டெலிசன் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
மானாமதுரை ராஜேஷ் கண்ணன் தாக்கல் செய்த மனு: எனது மகன் ஆகாஷ் டெலிசன் 26. அவரது நண்பர் குணா. இவர்கள் உட்பட சிலர் மார்ச் 6ல் மது அருந்தினர். தகராறு ஏற்பட்டது. தாக்குதலில் அழகர், ஜெயக்குமார் காயமடைந்தனர். மானாமதுரை போலீசார் விசாரணையின் போது தாக்கியதில் ஆகாஷ் டெலிசனின் வலது காலில் காயம், எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மதுரை அரசு மருத்துவமனையில் மார்ச் 8 ல் இறந்தார். எங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரணையின்போது அரசு தரப்பு: மரண வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தது.
நேற்று நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது.
அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அஜ்மல்கான்: ஆகாஷ் டெலிசனின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளவில்லை. அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: சட்டப்படி ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்ளது போல் சர்வதேச தரத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனை மையங்களை மேம்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

