sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கடத்தலை தடுக்க கனிமவள வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி

/

 கடத்தலை தடுக்க கனிமவள வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி

 கடத்தலை தடுக்க கனிமவள வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி

 கடத்தலை தடுக்க கனிமவள வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி


ADDED : மார் 14, 2026 06:46 AM

Google News

ADDED : மார் 14, 2026 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: கடத்தலை தவிர்க்க கனிமவளங்களை எடுத்துச்செல்லும் வாகனங்களில் மார்ச் 31க்குள் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் கனிமவளத்துறையின் கீழ் கல், மணல் குவாரிகள் செயல்படுகின்றன. மாநிலம் முழுவதும் கனிம வளங்கள் கடத்தல் அதிகம் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. குவாரிகளில் நிர்ணயித்த அளவைவிட ஆழமாக தோண்டியும், புறம்போக்கு நிலங்களில் உள்ள குவாரிகளில் வரம்பு மீறி கல், மணலை அள்ளியும் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். வாகனங்களில் கல், மணலை எடுத்துச் செல்வதிலும், நடைச்சீட்டுகளில் முறைகேடு செய்து வருவதாகவும் அரசுக்கு புகார்கள் வருகின்றன.

இதைதவிர்க்க தற்போது 'ட்ரோன் சர்வே' என்ற முறையில் குவாரிகள் அளவீடு, மதிப்பீடு செய்யப்படுகின்றன. அடுத்த கட்டமாக வாகனங்களில் கனிமங்களை கடத்துவதை தவிர்க்க 'ஜி.பி.எஸ்., கருவி' பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி குவாரிகளில் இருந்து கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் இதற்கான 'சிப்'ஐ பொருத்திக் கொள்வது அவசியம். இந்த வாகனங்களை கனிம வளத்துறையின் 'மிமாஸ்' (மினரல் மேனேஜ்மென்ட் சிஸ்டம்) செயலியில் மார்ச் 31க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் கனிம வளத்துறை எளிதாக வாகனங்களை கண் காணித்து நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு முறை நடைச்சீட்டு பெற்று, பலமுறை கனிமங்களை எடுத்துச் செல்லும் 'நடைச்சீட்டு முறைகேடும்' தவிர்க்கப்படும்.






      Dinamalar
      Follow us