/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் ரூ.74.79 லட்சம் உண்டியல் வருவாய்
/
குன்றத்தில் ரூ.74.79 லட்சம் உண்டியல் வருவாய்
ADDED : மார் 14, 2026 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள், உப கோயில்களின் உண்டியல்கள் நேற்று துணை கமிஷனர் ஞானசேகரன், ஆய்வர் இளவரசி, கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி, சத்தியசீலன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.
அதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ. 74 லட்சத்து 79 ஆயிரத்து 358, தங்கம் 162 கிராம், வெள்ளி 2 கிலோ 890 கிராம் கிடைத்தது. கோயில் பணியாளர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவியர், ஐயப்ப சேவா சங்கத்தினர் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

