sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : அக் 20, 2024 04:42 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2 பேருக்கு குண்டாஸ்


மதுரை: கீரைத்துரை மேலத்தோப்பு ரத்னகுமார் 23. இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உள்ளன. அவனியாபுரம் துரைபாண்டி 23. இவர் மீது போக்சோ வழக்கு உள்ளது. இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.

கோயிலை அகற்ற எதிர்ப்பு: 7 பேர் கைது


திருப்பரங்குன்றம்: ரத வீதிகள், கிரி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கிறது. நேற்று சன்னதி தெரு நுழைவு வாயில் ஆர்ச் அருகே இருந்த கல்யாண விநாயகர் கோயில் அகற்றப்பட்டது. அதற்கு ஹிந்து முன்னணி, அனுமன் சேனா நிர்வாகிகள் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட அகில பாரத அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், ஹிந்து மக்கள் கட்சி தென் மாநில அமைப்பாளர் அன்பழகன், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வகுமார், கோட்ட செயலாளர் அரசு பாண்டி, நிர்வாகிகள் சரவணன், சசிகுமார், தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இளைஞர் தற்கொலை


அலங்காநல்லுார்: கோவில்பாப்பாகுடி எஸ்.வி.டி. நகர்., முருகன் மகன் லோகேஷ்குமார் 28. பி.இ., முடித்துள்ளார். இறை வழிபாட்டில் அதிக ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். இவரது பெற்றோர் திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதால் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

------- இயந்திரத்தில் சிக்கி பெண் பலி


செக்கனுாரணி: பூவரசம்பட்டி ராமுத்தாய் 45. திருமங்கலம் - சோழவந்தான் ரோட்டில் உள்ள ஆயில் மில் ஊழியர். நேற்று ஆயில் எடுக்கும் இயந்திரத்தின் பெல்டில் சிக்கி இயந்திரத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு துாக்கி வீசப்பட்டு பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

கொள்ளையன் பலி


கொட்டாம்பட்டி: அலங்கம்பட்டி பால்பாண்டி 19. நண்பரான கமுதி மணிபாரதியுடன் 20, டூ வீலரில் மேலுார் நோக்கி சென்றார். நாகமங்கலம் அருகே டூ வீலர் நிலைத்தடுமாறி பாலத்தின் மீது மோதியதில் பால்பாண்டி இறந்தார். மணிபாரதி துவரங்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இருவர் மீதும் கொள்ளை வழக்குகள் உள்ளன.

பாட்டியும் கொலை


சோழவந்தான்: திருவேடகம் பழைய காலனி ஆறுமுகம் மகன் அய்யனார் 45. இவரது மனைவி உமா. 5 ஆண்டுகளுக்கு முன் கணவன் மற்றும் இரு மகள்களை பிரிந்து, அதேபகுதி முத்துராமலிங்கம் மகன் விவேக் உடன் ஊரை விட்டு சென்றார்.

இதனால் முத்தராமலிங்கம் குடும்பத்துடன் அய்யனார் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

அக்.3 இரவு மது போதையில் முத்துராமலிங்கம் வீட்டிற்குள் சென்ற அய்யனார், அவரது மனைவி தவமணி 55, மகள் வழி பேரன் விஷ்ணுவை 7, கத்தியால் வெட்டினார். அக்.4ல் விஷ்ணு இறந்தார். கொலை வழக்கில் அய்யனாரை போலீசார் கைது செய்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தவமணி நேற்று இறந்தார். முத்துராமலிங்கம் 60, தீவிர சிகிச்சையில் உள்ளார்.






      Dinamalar
      Follow us