
கார் கவிழ்ந்து ஐவர் காயம்
திருமங்கலம்: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பெங்களூருவில் வேலை செய்கிறார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு நேற்று காரில் பெங்களூருவுக்கு பெற்றோர், மனைவி, குழந்தைகளுடன் புறப்பட்டார். திருமங்கலம் - விருதுநகர் 4 வழிச்சாலையில் உசிலம்பட்டி ரோடு சந்திப்பு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஜார்ஜ் 35, அவரதுஅப்பா ஜெபசுதன் 70, அம்மா டெய்சி 65, படுகாயம் அடைந்தனர். மனைவி மற்றும் குழந்தைகள் சிறு காயங்களோடு தப்பினர். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
--------------பஸ் விபத்து: 30 பேர் காயம்
திருமங்கலம்: ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு திருமங்கலம் வழியாக செல்வதற்காக தனியார் பஸ் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை ஸ்ரீவில்லிபுத்துார் வைரமுத்து ஓட்டி வந்தார். நேற்று காலை 6:00 மணிக்கு திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், ஸ்டேட் வங்கி அருகில் ரோட்டில் சென்டர் மீடியன் மீது மோதியது. இதில் பஸ் 5 அடி துாரம் வரை சென்டர் மீடியனின் இடித்து நின்றது. இவ்விபத்தில் 5 பெண்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.