
முதியவர் கொலை
மேலுார்: கோட்டைபட்டி பாண்டியன் 50. சலுான் கடை உரிமையாளர். கைலம்பட்டியில் குடும்பத்தினருக்கு உணவு வாங்க வந்தவரிடம் மதுபோதையில் இருந்த சாலைக்கிபட்டி தினகரன் 33, தும்பைபட்டி மலர்வண்ணன் 30, உட்பட 6 பேர் மதுவாங்கி வரச்சொல்லி தகராறு செய்து தாக்கியதில் இறந்தார். எஸ்.ஐ.,சுப்புலட்சுமி விசாரிக்கிறார்.
முதியவர் பலி
மேலுார்: மட்டங்கிபட்டி விவசாயி மோகன் 64. டூவீலரில் மேலுாருக்கு சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. நா.கோவில்பட்டி அருகே பின்னால் டூ வீலரில் வந்த மதுரை டி.வி.எஸ்., நகர் சத்தியமூர்த்தி மோதியதில் மோகன் இறந்தார். எஸ்.ஐ., ஆனந்தஜோதி விசாரிக்கிறார்.
கொத்தனார் பலி
கொட்டாம்பட்டி: மதுரை அனுப்பானடி விவேகானந்தன் 37. மேலுார் சொக்கம்பட்டியில் தங்கி கொத்தனார் வேலை செய்தார். வேலைக்கு டூவீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. கொட்டாம்பட்டி, காடம்பட்டி விலக்கருகே நிலைத்தடுமாறி கீழே விழுந்து இறந்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி விசாரிக்கிறார்.
மாணவன் பலி
அலங்கநல்லுார் ஜான் கென்னடி 40, வெல்டிங் கடை வைத்துள்ளார். இவரது மகன் தேவா 14, அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் விளையாட சென்றவர் வீடு திரும்பவில்லை. ஆற்றில் குளித்த போது அடித்து செல்லப்பட்டுள்ளார். நேற்று மதியம் பி.மேட்டுப்பட்டி அருகே பெரியாறு பாசன கால்வாயில் ஒதுங்கிய மாணவனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.