
மூதாட்டி பலி
கொட்டாம்பட்டி: தொட்டிச்சி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் 64. நேற்று முன்தினம் இரவு பாண்டாங்குடி மர அறுவை மில் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். எஸ்.ஐ. மணிமாறன் விசாரிக்கிறார்.
சகோதரிகள் கைது
திருமங்கலம்: ஏ.தொட்டியபட்டியை சேர்ந்த சிவகாமி 32, டவுன் பஸ்ஸில் திருமங்கலத்திற்கு வந்துள்ளார். 20 பவுன் நகைகளை கட்டைப்பையில் வைத்திருந்தார். பஸ் ஸ்டாண்டில் இறங்கும் போது நகை வைத்திருந்த பை மாயமானது தெரிந்தது. பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையும்போது இரண்டு பெண்கள் பஸ்சிலிருந்து வேகமாக இறங்கி சென்றது குறித்து கண்டக்டர் மற்றும் பயணிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ராமநாதபுரம் கேணிக்கரையைச் சேர்ந்த சகோதரிகள் சாந்தி 42, கவிதா 44, என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.