ADDED : பிப் 16, 2024 05:51 AM
90 கிலோ புகையிலை பறிமுதல்
மதுரை: மேலஹனுமந்தராயர் தெருவில் பரஸ்மால் 50, என்பவர் இந்துஸ்தான் மார்க்கெட் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இங்கு திலகர்திடல் போலீசார்சோதனை மேற்கொண்டு 90 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
நகை, பணம் திருட்டு
கொட்டாம்பட்டி: சூரப்பட்டி சக்தி 41. தனியார் நிதிநிறுவன ஊழியர். நேற்று முன்தினம் வீடடை பூட்டி விட்டு பெற்றோருடன் மருத்துவமனைக்கு சென்றார். மதியம் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் 5 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. எஸ்.ஐ., அண்ணாத்துரை விசாரிக்கிறார்.
விவசாயி பலி
கொட்டாம்பட்டி : வீரசூடாமணிபட்டி விவசாயி ராஜூ 75. நேற்று காலை டூவீலரில் வஞ்சிநகரம் நோக்கி சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. எதிரே வந்த லாரி மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
சாவில் மர்மம்
திருமங்கலம்: கூடக்கோவில் அருகே டி.கொக்குளம்கட்டட தொழிலாளி சோலைமலை 52. சொந்த இடத்தில் அறை கட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் 60, எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பும் போலீசில் புகார் செய்தனர். நேற்று இருவருக்கும் வாக்குவாதம்ஏற்பட்டபோது சோலைமலை மயங்கி விழுந்து இறந்தார். சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.