
விபத்தில் தொழிலாளி பலி
பாலமேடு: கோடாங்கிபட்டி தெற்கு தெரு கணேசன் 30. கட்டட தொழிலாளி. நேற்று காலை வேலைக்கு செல்ல டூவீலரில் அதே பகுதி நண்பர் தினேஷ் 30, உடன் முடுவார்பட்டி நோக்கி சென்றார். கணேசன் ஓட்டி வந்த டூ வீலர் வெள்ளையம்பட்டி, முடுவார்பட்டி பிரிவில் வளைந்தபோது பாலமேடு நோக்கி நின்றிருந்த கார் திடீரென திரும்பி டூவீலரில் மோதியது. இதில் கணேசன் இறந்தார். தினேஷ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். டிரைவர் வெள்ளையம்பட்டி சரவணனை 41, போலீசார் கைது செய்த பாலமேடு போலீசார் விசாரிக்கின்றனர். கணேசனுக்கு மனைவி மற்றும் 5 மாத ஆண் குழந்தை உள்ளனர்.
ஒருவர் பலி
கொட்டாம்பட்டி: சீயந்தான்பட்டி சதீஷ்குமார் 30. அய்யாபட்டி விலக்கில் பெட்டி கடை நடத்தினார். நேற்று காலை கடைக்கு பொருட்கள் வாங்க டூவீலரில் கருங்காலக்குடிக்கு சென்றார். பட்டமங்கலப்பட்டி விலக்கு அருகே பின்னால் வந்த கார் மோதி இறந்தார். இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கின்றனர்.
ஆட்டோ டிரைவர் பலி
உசிலம்பட்டி: குப்பணம்பட்டி சுருளியாண்டவர் 39. ஆட்டோ டிரைவரான இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று தனது தோட்டத்தில் மோட்டாரை இயக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.