
பஸ் மோதி முதியவர் பலி
வாடிப்பட்டி: வல்லப கணபதி கோயில் தெரு அன்புக்கனி 65, பலசரக்கு கடையில் வேலை பார்த்தார். இவர் நேற்று மதியம் சைக்கிளில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வார சந்தைக்கு வந்தார். பேரூராட்சி அலுவலகம் எதிரே வந்தபோது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் சைக் கிளில் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்தார். வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் வளர்மதி, எஸ்.ஐ., திவ்யா விசாரிக்கின்றனர்.
டிரைவர் தற்கொலை
திருமங்கலம்: அம்மாபட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் 41, திருப்பரங்குன்றம் அரசு பஸ் டெப்போவில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி துளசி. இவருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வந்த அவர் உச்சபட்டிக்கு சென்றுள்ளார். அங்கு கண்மாய் கரையை அருகே குப்பை கிடங்கில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.---