sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : செப் 16, 2025 04:34 AM

Google News

ADDED : செப் 16, 2025 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தை எடுத்தபோது பலி மதுரை: பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் அஜிஷ்சேட் 27. லோடுமேனாக இருந்தார். வீட்டருகே குழந்தை ஒன்று விளையாடிய பந்து மின்ஒயரில் விழுந்தது. அதை ஒட்டடை எடுக்கும் கம்பியால் அஜிஷ்சேட் எடுத்து கொடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.

முதியவர் பலி மேலுார்: அம்மன் கோவில் பட்டி அழகு 80. நேற்று முன்தினம் இரவு பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது திருப்பத்துார் - மதுரை சென்ற வேன் மோதி இறந்தார். கீழவளவு எஸ்.ஐ., அசோக்குமார் விசாரிக்கிறார்.

டூவீலர் மோதி மாணவர் பலி உசிலம்பட்டி: மருதம்பட்டி சிவஞானகண்ணன் மகன் பாண்டிச்செல்வம் 16. பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். நேற்று காலை மதுரை - தேனி ரோட்டை கடக்க முயன்ற போது, தேனியில் இருந்து உசிலம்பட்டி வந்த டூவீலர் மோதியதில் பலியானார். டூவீலரில் வந்தவர் தப்பிச் சென்றார். உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us