ADDED : அக் 19, 2025 10:16 PM
ஆற்றில் குளித்த மாணவர் பலி
மதுரை: சிலைமான் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தபி.பி.ஏ., 2ம் ஆண்டு மாணவர் சஞ்சீவ்ராஜ் 19,துக்ளாபட்டி பகுதியில் வைகை ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தார். தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரியில் மோதி ஒருவர் பலி
திருமங்கலம்: நாகமலை புதுக்கோட்டை அருகே கீழக்குயில் குடி வினித் குமார் 23, படித்து விட்டு வேலை தேடி வந்த இவர் நேற்று முன்தினம் கப்பலுார் சிட்கோவில் நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றார். வீட்டிலிருந்து காலையில் கிளம்பியவர், இரவு 7:00 மணிக்கு கப்பலுாரில் இருந்து கீழக்குயில்குடிக்குச் சென்றார். கூத்தியார்குண்டு அருகே முன்னாள் சென்ற லாரி திடீரென நின்றதால் அதன் மீது மோதி கீழே விழுந்தார். தலையில் காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பலியானார். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த லாரி டிரைவர் சங்கரை கைது செய்த, திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேன் மோதி விவசாயி பலி
திருமங்கலம்: அச்சம்பட்டி விவசாயி திருமலை 45, நேற்று முன்தினம் இவர் அச்சம்பட்டி அருகே நடந்து சென்றார். அப்போது சேடப்பட்டி சென்ற மினி வேன் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
துாங்கிய பெண்ணிடம் நகை திருட்டு
திருமங்கலம்: தோப்பூரை சேர்ந்த சோனை முத்து 47, நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கினர். காற்றுக்காக கதவை திறந்து வைத்து துாங்கிய மகள் ஆஷிகா 19, அணிந்திருந்த 2.5 பவுன் நகை, வீட்டில் இருந்த அலைபேசியை மர்ம நபர் திருடி தப்ப முயன்றார். சத்தம் கேட்டு எழுந்த வீட்டினர் மர்ம நபரை விரட்டிய போது அவர் தப்பினார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமி கர்ப்பம்: சிறுவன் கைது
கள்ளிக்குடி: அரசபட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி கர்ப்பம் அடைந்தார். தகவல் அறிந்த ஊர் நல அலுவலர் ஆவுடையம்மாள் புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.
--------அரசு பஸ் மோதி ஒருவர் பலி
கள்ளிக்குடி: விருதுநகர் மாவட்டம் சூலக்கரையைச் சேர்ந்த தமிழ்பாண்டி 58, டீ மாஸ்டரான இவர் சமீபத்தில் வேலையில்லாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் கள்ளிக்குடி பகுதி டீக்கடையில் வேலை கேட்டு வந்த அவர் சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றார். கன்னியாகுமரியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியதில் பலியானார். கன்னியாகுமரி பஸ் டிரைவர் செல்வராஜிடம் கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி ஒருவர் பலி
கொட்டாம்பட்டி: மணப்பட்டி பழனிக்குமார் 30. நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு செல்வதற்காக மணப்பட்டி நான்கு வழிச்சாலையை கடந்த போது மதுரையிலிருந்து - திருச்சி சென்ற கார் மோதி பழனிக்குமார் இறந்தார். கொட்டாம்பட்டி போலீஸ் தெய்வேந்திரன் விசாரிக்கிறார்.
குளிக்க சென்றவர் பலி
மேலுார்: அம்பலகாரன்பட்டி கார்த்திக் 27, மேலுார் காந்தி நகரில் வசித்தார். நேற்று நண்பர்கள் பிரபு, வெற்றிவேலுடன் கருத்த புளியம்பட்டி சொக்கர் ஊருணியில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மூவர் கைது
மேலுார்: செக்கடி பகுதியில் அ.வல்லாளபட்டி சித்திக் 33, சென்ற டூவீலரும், நொண்டி கோவில்பட்டி ராகுல் 30, சென்ற டூவீலரும் மோதிக் கொண்டதால் தகராறு ஏற்பட்டது. ராகுல் மற்றும் நண்பர்கள் தாக்கியதில் காயமடைந்த சித்திக் மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சித்திக் புகாரின்படி, மேலுார் போலீஸ்காரர் தினேஷ் குமார் நொண்டி கோவில் பட்டி ராகேஷ் சர்மா 25, ராஜன் 24, ராகுல் 24 ஆகியோரை கைது செய்தார்.