ADDED : அக் 19, 2025 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஷெனாய் நகரில் நலிவடைந்த மக்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி, சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார். மதுரை குழந்தைகள் நலப்பிரிவு டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொருட்களை வழங்கினார்.
* சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த 'டைனி ஹேண்ட்ஸ் பிக் லேர்னிங்' எனும் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் திறன் வளர்ப்பு பயிற்சி பொருட்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட சமூகநலன் அலுவலர் காந்திமதி, திட்ட அலுவலர் ஷீலாசுந்தரி, டிரஸ்ட் நிர்வாகி மீனாட்சிசுந்தரம் உட்படபலர்பங்கேற்றனர்.