மதுரை: மதுரை கே.எம்.ஆர்., சர்வதேச பள்ளியில் மாநில அளவிலான யோகா போட்டிகள் நடந்தன. பள்ளித் தாளாளர் கிருஷ்ணவேணி போட்டியை துவக்கி வைத்தார்.
பிரணவ் நிதின், ரஜிதியா, சாப்ரின் நிஷா, ரக் ஷனா, சாய்ரஞ்சித், சந்தோஷ், சீமான் சாரதி, ஜெய்லேஷ், ஹரிகரன் முதல் பரிசு பெற்றனர்.
கவின், தீக் ஷிதா, கிருத்திக் சரண், நிமலன், திருமுருகன், சாத்விக் அதிரன், சாய்சஞ்சித், சுஜய், சுஜன் ஆகியோர் 2ம் பரிசும் பெற்றனர். ரித்திக், திவிக், ரியான் மூன்றாம் பரிசு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் மயில், மியாகி வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளித் தலைமை பயிற்சியாளர் வைரமணி, கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராஜா இந்திரா, யோகா அகாடமி தலைவர் இந்திரா பரிசு வழங்கி னர்.
பள்ளி முதல்வர்கள் விஜயா, சரஸ்வதி, உடற்கல்வி ஆசிரியர்கள் சின்னசாமி, லிவிங்ஸ்டன் உடனிருந்தனர். திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி, தி சாய் ட்ரெடிஷனல் ஆர்ட் ஏற்பாடுகளை செய்தன.