ADDED : அக் 25, 2025 04:31 AM
மனைவி கண்முன் ------------கணவர் பலி
மதுரை: சமயநல்லுார் அருகே ஊர்மெச்சிக் குளத்தைச் சேர்ந்தவர் பாண்டி 55. நேற்று காலை டூவீலரில் ஓபுளா படித்துறை பகுதி வைகையாற்று பாலத்திற்கு செல்ல வைகை வடகரையில் இருந்து திரும்பும்போது அண்ணா பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆரப்பாளையம் சென்ற மினி பஸ் மோதியதில் இறந்தார். அவருடன் வந்த மனைவி செந்தா மரைக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை பணம் திருட்டு
மேலுார்: தும்பைபட்டி கார்த்திக். சிங்கப்பூரில் பணிபுரிகிறார். இவரது மனைவி பாண்டியம்மாள் 35, நேற்று முன்தினம் மாலை ஏ.கோயில்பட்டியில் வசிக்கும் அம்மாவை பார்க்க வீட்டை பூட்டிச் சென்றவர் நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

