
8 கிலோ கஞ்சா: இருவர் கைது
எழுமலை: கோடாங்கிநாயக்கன்பட்டி பகுதியில் போலீஸ் எஸ்.ஐ., கேசவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாக்குப்பையுடன் வந்த கோடாங்கிநாயக்கன்பட்டி சேகர் 56, மதுரை முனிச்சாலை குமரன் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் 27, ஆகியோரை சோதனையிட்டனர். அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவர்களிடம் கஞ்சா, அலைபேசியை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
சிறுமிக்கு தொல்லை: ஒருவர் கைது
திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகாவிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அதே பகுதியில் வேல்முருகன் என்பவர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். வேல்முருகனின் மகன் கண்ணன் 25, சிறுமியிடம் அத்துமீறி நடந்ததுடன், அடிக்கடி பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரில் கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

