போக்சோவில் கைது
மதுரை: நெல்பேட்டையைச் சேர்ந்தவர் ஷேக் மொகைதீன் 25. இவர் அப்பகுதி 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
ஆசிட் குடித்து தற்கொலை
மதுரை: பொன்மேனி இ.எம்.எஸ்., நகர் மணிகண்டன் 45. கார் வாஷிங் கம்பெனி ஒன்றில் வேலை செய்தார். துாக்கமின்றி மனநல சிகிச்சை பெற்று வந்த நிலையில், 'சாகவேண்டும் என்பது போல் தோன்றுகிறது' எனக்கூறியுள்ளார். வீட்டில் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாடக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அமெரிக்காவில் இருந்து புகார்
மதுரை: எல்லீஸ்நகரைச் சேர்ந்தவர் சரவணன் 58. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கிறார். இவரது எல்லீஸ்நகர் வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த கவுஸ்பாட்ஷா என்பவர் அத்துமீறி நுழைந்து ஒரு பகுதியை ஆக்கிரமித்ததாகவும், சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் போலீசாரின் வெளிநாட்டு வாழ் இந்தியர் 'செல்' மூலம் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார். இதன் அடிப்படையில் கவுஸ்பாட்ஷா மீது எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஓட்டல் உரிமையாளர் பலி
உசிலம்பட்டி: டி.செட்டியபட்டியில் ஓட்டல் நடத்தியவர் வேல்முருகன் 43. நேற்று காலை டூவீலரில் இடையபட்டி அருகே வந்தபோது, எதிரே தேனி மாவட்டத்தில் இருந்து வந்த டிராவல்ஸ் வேன் மோதி இறந்தார். உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயி பலி
உசிலம்பட்டி: கே.போத்தம்பட்டி விவசாயி தவமணி 45. நேற்று அதிகாலை நல்லுத்தேவன்பட்டி கண்மாய் அருகே டூவீலரில் சென்ற போது வாகனம் ஒன்று மோதி இறந்தார். உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

