UPDATED : அக் 05, 2026 10:31 AM
ADDED : அக் 04, 2026 06:45 PM
* டிப்பர் லாரி பறிமுதல்
பேரையூர்: அணைக்கரைப்பட்டி முத்துராஜ் 31. தனுஷ் 25. இருவரும் டிப்பர் லாரியில் செம்மண் கடத்திக்கொண்டு அத்திபட்டி அருகே வந்தனர். திடீரென லாரி பழுதாகி ரோட்டில் நின்றது. அத்திபட்டி வி.ஏ.ஓ., மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தப்பிய இருவரையும் தேடி வருகின்றனர்.
* விவசாய
மோட்டார் திருட்டு
பேரையூர்: காரைக்கேணி பாஸ்கரபாண்டியன் 61. இவருக்கு அதே ஊரில் விவசாயத் தோட்டம் உள்ளது. இங்குள்ள மோட்டார் அறையை மர்ம நபர்கள் உடைத்து மின் மோட்டார் மற்றும் விவசாயம் செய்வதற்கான பொருட்களை திருடிச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
* டோல்கேட் மீது
டி.எஸ்.பி.,யிடம் புகார்
திருமங்கலம்: கப்பலுாரில் விதிமீறி அமைத்த டோல்கேட்டில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உள்ளூர் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் அவ்வப்போது டோல்கேட் நிர்வாகம் உள்ளூர் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் சில நாட்களாக டோல்கேட்டை கடந்து செல்லும் உள்ளூர் வாகனங்களில் வருடாந்திர பாஸ் எடுத்த வாகனங்களுக்கும், பாஸ்ட் டேக் ஒட்டிய உள்ளூர் வாகனங்களுக்கும் மூலம் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்வி கேட்கும் வாகன ஓட்டிகளிடம் டோல்கேட் ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறி கப்பலுார் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று திருமங்கலம் டி.எஸ்.பி., இமயவர்மனிடம் புகார் அளித்தனர்.
* மனைவி தடையால்
கணவர் தற்கொலை
திருப்பரங்குன்றம்: அருகே கரடிப்பட்டி கட்டடத் தொழிலாளி வீரமணி 19. இவர் திருமணம் முடித்து மனைவி சுகன்யாவுடன் திருமங்கலம் அருகே சமத்துவபுரத்தில் வசித்தார். மாடுபிடி வீரராக இருந்த வீரமணி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கக் கூடாது, மாடுகளை பிடிக்கக்கூடாது என மனைவி இவரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இதில் விரக்தி அடைந்த வீரமணி நேற்று முன்தினம் இரவு விருதுநகர் ரயில்வே தண்டவாளத்தில் ரயிலின் முன்பு பாய்ந்து. தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஆபாச வீடியோ
போலீசார் விசாரணை
மேலுார் :மேலுார் மூவேந்தர் நகர் அபிநயா 33, இவருக்கு தெரிந்தவர் பிரபா ஜெயராஜ் 60, இவர் அபிநயா டெலிகிராம் கணக்கிற்கு ஆபாச வீடியோ அனுப்பவே போலீசில் புகார் கொடுத்தார். மேலுார் போலீசார் பிரபா ஜெயராஜிடம் விசாரிக்கின்றனர்.
* டூவீலர்கள் மோதல்
ஒருவர் பலி
திருமங்கலம்: வடகரையைச் சேர்ந்த பால் வியாபாரி ஆறுமுகம் 50, இவர் நேற்று வடகரையில் இருந்து திருமங்கலத்திற்கு டூவீலரில் சென்றார். அப்போது எதிர் திசையில் டூவீலரில் வந்த சின்ன உலகாணியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி 27, ஓட்டி வந்த டூ வீலர் ஆறுமுகம் டூவீலர் மீது மோதியது. காயமடைந்த இருவரையும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ஆறுமுகம் பலியானார். அலெக்ஸ் பாண்டி சிகிச்சையில் உள்ளார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
