/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாயில் மண்அள்ளுவதாக மனுகொடுக்க வந்தவர் ஆவேசம் அமைதிப்படுத்தி அனுப்பிய போலீசார்
/
கண்மாயில் மண்அள்ளுவதாக மனுகொடுக்க வந்தவர் ஆவேசம் அமைதிப்படுத்தி அனுப்பிய போலீசார்
கண்மாயில் மண்அள்ளுவதாக மனுகொடுக்க வந்தவர் ஆவேசம் அமைதிப்படுத்தி அனுப்பிய போலீசார்
கண்மாயில் மண்அள்ளுவதாக மனுகொடுக்க வந்தவர் ஆவேசம் அமைதிப்படுத்தி அனுப்பிய போலீசார்
ADDED : ஜன 07, 2025 05:03 AM
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
வைகைநதி மக்கள் இயக்க தலைவர் வைகைராஜன் அளித்த மனு: வைகை நதி 6 மாவட்ட மக்களின் விவசாய, குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்தஆறு மதுரையில் பயணிக்கும் 8 கி.மீ., பகுதியில் கடுமையாக மாசுபடுகிறது. இதனை தவிர்க்க கண்காணிப்பு மேற்கொள்ள மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. எனவே நதியின் இருபுறமும் சுற்றுச் சூழல் காவலர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
வலைசேரிப்பட்டி சரவணன் அளித்த மனுவில், ''வாக்காளர்கள் பணம், பரிசுப் பொருள் வாங்காமல் வாக்களிப்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அரசு அலுவலகங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும். ஊராட்சிகளில் குடியரசு தின உறுதிமொழியாக ஏற்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
தெற்கு தாலுகா நல்லுார் பாலமுருகன் கலெக்டரிடம் மனுகொடுக்க வந்தார். வரிசையில் நின்றவர் திடீரென, 'புதுக்குளம், புளிச்சிக்குளம் கண்மாயில் வண்டல் மண் அள்ள அனுமதி பெற்று, செம்மண்ணை அள்ளிச் செல்கின்றனர். விதிமீறி அள்ளி கண்மாயை அழித்து விட்டனர்' என ஆவேசமானார். இன்ஸ்பெக்டர் சங்கீதா, எஸ்.ஐ., ஜெயா அமைதிப்படுத்தினர்.
அவரது மனுவில், ''கண்மாயில் 10 அடிக்கு மண் அள்ளுவதை தெரிவித்ததால் சிலர் கொலை செய்ய முயல்கின்றனர். வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ., கலெக்டர், போலீசார் என பலரிடமும் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

