/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயிற்சி போலீசார் வகுப்பு நிறைவு விழா
/
பயிற்சி போலீசார் வகுப்பு நிறைவு விழா
ADDED : டிச 01, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்,: இடையபட்டி காவல் பயிற்சி பள்ளியில் 159 பயிற்றுநர்கள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா நேற்று நடந்தது. ஐ.ஜி., ஜெயகவுரி தலைமை வகித்தார். எஸ்.பி. மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
ஐ.ஜி., பேசுகையில், ''தமிழ்நாடு முழுவதும் உள்ள 8 நிரந்தர காவல் பயிற்சி பள்ளிகளில் 2ம் நிலை போலீசாராக பணிபுரிய 1890 ஆண்கள் மற்றும் 804 பெண்கள் என தேர்வு செய்யப்பட்ட 2694 பேருக்கு 7 மாதம் அடிப்படை மற்றும் ஒரு மாதம் நடைமுறை என 8 மாதம் பயிற்றுநர்கள் பயிற்சி பெற உள்ளனர்'' என்றார். பயிற்சி பள்ளி முதல்வர் உன்னிகிருஷ்ணன், துணை முதல்வர் மாரியப்பன் கலந்து கொண்டனர்.